செவ்வாய், 15 ஜனவரி, 2019

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றம்சாட்டிய சயன், மனோஜ் ஆஜர்! January 14, 2019

source: ns7.tv

Image
கோடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி மீது குற்றம்சாட்டிய சயன், மனோஜ் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக நாரதா செய்தி ஆசிரியர் மேத்யூ சாமூவேல் இரு தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த சம்பவங்களுக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
முதல்வர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில் மத்திய குற்றப்பிரிவில் புகாரளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சயான், மனோஜ் ஆகியோரை நேற்று டெல்லியில் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.
எழும்பூர் குற்றபிரிவு அலுவலகத்தில் வைத்து 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய போலீசார் இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

Related Posts: