ஞாயிறு, 27 ஜனவரி, 2019

நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுமா? January 26, 2019

Image
குஜராத் அரசு பப்ஜி விளையாட்டிற்கு தடை செய்த சம்பவம், நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 
செல்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோர், அதில் உள்ள ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டனர். இந்நிலையில், கடந்த சில காலமாக பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பெரும்பாலான மாணவர்களை அடிமையாக்கிவைத்துள்ளது. பப்ஜி விளையாட்டிற்கு பல நிறுவனங்களும் தடை விதித்துள்ளது. 
இதனை அடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஜம்மு கேஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் சிலர், தேர்வில் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்கள் எடுத்துவரக்காரணம் பப்ஜி விளையாட்டுதான் என தெரிவித்து, பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்குமாறு ஜம்மு கேஷ்மீர் அரசிற்கு மனு அளித்தனர். இதனை கேள்விப்பட்ட குஜராத் அரசாங்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் மாநிலம் முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்துள்ளது. மேலும், பள்ளிகளில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
இதுமட்டுமல்லாமல், குழந்தை உரிமைகளை பாதுகாக்கும் தேசிய கமிஷனிடம், நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்து, இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்யமுடியுமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

source: www.ns7.tv/ta/tamil-news/india-technology-editors-pick/26/1/2019/will-pubg-game-banned-around-country