திங்கள், 28 ஜனவரி, 2019

ஜிஎஸ்டி வரி குறைப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையாக கொண்டுவரப்படும் - தயாநிதிமாறன் January 28, 2019

Image
ஜிஎஸ்டி வரி குறைப்பு  திமுகவின் தேர்தல் அறிக்கையாக கொண்டுவரப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். 

சென்னை திருவல்லிக்கேணியில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நக்கீரன் கோபால், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில், விக்கிரமராஜா பேசும்போது, பிரதமர் மோடி மீது வைத்த நம்பிக்கை வீண் போனது என்று வருத்தம் தெரிவித்த அவர், அவசர அவசரமாக ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், மத்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டிய விக்கிரமராஜா, உணவு தர நிர்ணய சட்டத்தால் வணிகர்கள் பாதிக்கப்படுள்ளதாக தெரிவித்தார். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் தடை விவகாரத்தில் தடை செய்யப்படாத பொருட்களையும் அதிகாரிகள் வணிகர்களிடமிருந்து பறிமுதல் செய்து வருகின்றனர் என்று அவர் வேதனை தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசும்போது, வாய்ப்பளித்தால் மீண்டும் நல்லாட்சி கொண்டு வரப்படும் என்கிறார் பிரதமர் மோடி. கடந்த 4 ஆண்டுகள் என்ன ஆட்சி கொடுத்தார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பிய அவர், ஜிஎஸ்டி வரி குறைப்பு தேர்தல் அறிக்கையாக கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/28/1/2019/gst-tax-reduction-will-be-there-dmk-election-manifesto-said-former