செவ்வாய், 5 மார்ச், 2019

உலகின் மோசமான காற்று மாசுபாடு கொண்ட 10 நகரங்கள் பட்டியலில் 7 இந்திய நகரங்கள்! March 05, 2019

source: Ns7.tv
Image
2018ம் ஆண்டிற்கான உலகின் மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரங்கள் குறித்து வெளியான பட்டியலில் 20ல் 15 இந்திய நகரங்கள் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் அடுத்த ஆண்டுவாக்கில் மட்டும் சுமார் 70 லட்சம் பேரின் மரணத்திற்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் AirVisual and Greenpeace அமைப்பு சார்பில் கடந்த ஆண்டில் உலகில் உள்ள நகரங்களின் காற்று மாசுபாடு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. இதன்படி மோசமான காற்றுமாசு கொண்ட நகரங்கள் வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி காற்றுமாடுபாட்டில் உலகிலேயே மிக மோசமான நகரமாக முதலிடத்தை குருகிராம் (இந்தியா) பெற்றுள்ளது.
இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை காசியாபாத் (2), ஃபைசலாபாத் (3), ஃபரிதாபாத் (4) பிவாடி (5) போன்ற நகரங்கள் பெற்றுள்ளன. இதில் ஃபைசலாபாத்தை (பாகிஸ்தான்) தவிர்த்து மற்ற நகரங்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ளன.
இப்பட்டியலில் நொய்டா (6), பாட்னா (7), சீனாவில் உள்ள ஹோடன் (8), லக்னோ (9), பாகிஸ்தானில் உள்ள லாகூர் (10) நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. முதல் 10 இடங்களில் 7 நகரங்கள் இந்தியாவில் உள்ளது என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாகும்.
தேசிய தலைநகர் பகுதியான (NCR) உலகிலேயே மிகவும் ஆபத்தான காற்றுமாடுபாடு கொண்ட பகுதியாக உள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பட்டியலில் டாப் - 30 இடங்களை 22 இந்திய நகரங்கள் அலங்கரிப்பது காற்று மாசுபாட்டில் இந்தியாவின் மோசமான நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.