செவ்வாய், 5 மார்ச், 2019

தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை? March 05, 2019

தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்குமாறு, மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தேர்தல் பிரசாரத்தின்போது, பயன்படுத்தப்படும பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள், பெயர் பலகைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அதற்கு தடை விதிக்குமாறும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல தலைமையிலான அமர்வு, தேர்தல் பிரசாரத்தின்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து, தேர்தல் ஆணையம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல்துறை ஒருவாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.

source: ns7.tv