வியாழன், 7 மார்ச், 2019

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்! March 07, 2019

Image
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தொட்டது. 
இந்த நிலையில், இன்று 10 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி மற்றும் மதுரை விமான நிலையம் பகுதிகளில் 105 புள்ளி 8 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருத்தணியில் 104 புள்ளி 5 டிகிரியும், சேலம், திருச்சி, தருமபுரி மாவட்டங்களில் 104 டிகிரியும், நாமக்கல், பாளையங்கோட்டையில் 103 புள்ளி ஒன்று டிகிரியாகவும் வெப்பநிலை பதிவானது. 
வேலூர் மாவட்டத்தில் 102 புள்ளி 9 டிகிரி, கோவை விமான நிலையத்தில் 101 புள்ளி 4 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 98 புள்ளி 4 டிகிரி வெப்பநிலை இன்று பதிவானது

source ns7tv

Related Posts: