இந்திய விமானப்படை நடத்திய வான் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டு, நம் நாட்டு படைவீரர்களின் துணிச்சலை எதிர்க்கட்சிகள் இழிவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக தான் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களுக்குள் நுழைந்து தாக்கியதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். துடன், மக்களையும் திசை திருப்புவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றபோது முந்தைய காங்கிரஸ் அரசு அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
இதற்கு பதிலடியாக, நாட்டுக்காக ரத்தம் சிந்தி வீரமரணம் அடையும் வீரர்களின் தியாகத்தை வைத்து யாரும் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கக்கூடாது என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படை வீரர்களின் இறப்பை அரசியலுக்காக பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கருத்து தெரிவித்தால் அவரை பாகிஸ்தான் ஆதரவாளராக சித்தரிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
source:
ns7.tv/ta/tamil-news/india/6/3/2019/modi-criticizes-pm-criticizing-opposition