திங்கள், 18 நவம்பர், 2019

இனி தீர்க்கமான சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்காது - இலங்கை எம்பி பேச்சால் பரபரப்பு...


Image
இலங்கையில் தாமதப்படுத்தப்பட்டு வந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். 
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வின்போது பேசிய கோத்தபய ராஜபக்சவிடம், தாமதப்பட்டு வரும் மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துமாறு தேர்தல் ஆணையக் குழுத் தலைவர் கேட்டுக்கொண்டார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கோத்தபய ராஜபக்ச உறுதி அளித்தார். 
தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசியலில் இனி தீர்க்கமான சக்தியாக இருக்காது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு செல்லாக்காசாக மாறிவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர பிரச்சாரத்தையும் மீறி வடக்கு கிழக்கு மாகாணத்தில் கோத்தபய ராஜபக்சவிற்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் நமல் ராஜபக்சே கூறினார். இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடு என்பதை மக்கள் உறுதிசெய்திருப்பதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

credit ns7.tv