ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கும் பாலிகோட்ஸ் புழுக்களை சென்னைக்கு கடத்த முயன்ற 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பாம்பன் கடலோர பகுதிகளில் காணப்படும் பாலிகீட்ஸ் புழுக்கள் கடல்வாழ் உயிரினங்களின் பல் உயிர் பெருக்கத்துக்கு உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், பாம்பன் கடற்கரை பகுதிகளில் காணப்படும் இந்த பாலிகீட்ஸ் புழுக்களை சட்டவிரோதமாக, சேகரித்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
புழுக்களை உயிருடன் சேகரிக்கும் இவர்கள், வெளி மாநிலங்களில் உள்ள இறால் பண்ணைகளுக்கு உணவாக விற்பனை செய்து வருகின்றனர். இதே போல், சென்னைக்கு சட்டவிரோதமாக பாலிகீட்ஸ் புழுக்களை கடத்தி சென்ற 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 160 கிலோ பாலிகீட்ஸ் புழுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
credit ns7.tv