ஞாயிறு, 24 நவம்பர், 2019

இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் அரசு அதிகாரிகளுக்கு இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

Image
இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் நாராயணமங்கலம் கிராமத்தில் தேர் பவனி நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி வரதராஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, வருவாய் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண உத்தரவிட்டார். இந்த முயற்சி தோல்வி அடைந்ததால், மனுதாரர் மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், வழிபாடு நிகழ்வின்போது பிரச்சினை ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் மட்டுமே அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகாரம் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் கட்டுப்பாடு என்று கூறி, இறை வழிபாட்டை தடை செய்ய அதிகாரம் இல்லை எனவும், ஆகையால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், கிராம மக்களுடன் பேசி பிரச்னைக்கு தீர்வுகண்டு தேர் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தார். 
credit ns7.tv