கீழடி அகழ்வாராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
மதுரை விமான நிலையத்தில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கீழடியில் அடுத்தக்கட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் தமிழக அரசு மற்றும் மதுரை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மதுரை பல்கலைக்கழகத்திற்கு நிதி அளித்து வரும் ருசா அமைப்பு மூலம், கீழடி ஆராய்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை பயன்படுத்த மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி பெற உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, முதல் கட்ட ஆராய்ச்சியின் மாதிரியை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
credit ns7.tv