முரசொலி நாளிதழின் அலுவலகம் பஞ்சமி நிலமா என்பது குறித்து பிற்பகலில் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இதுகுறித்து பாஜக தரப்பில் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் முரசொலி மேலாண் இயக்குனருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த புகார் மீதான விசாரணை நடைபெற உள்ளது. இதில் தமிழக அரசு தரப்பிலும், திமுக தரப்பிலும் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
credit ns7.tv