வெள்ளி, 15 நவம்பர், 2019

சபரிமலை விவகார தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து!

Image
சபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை, 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதாகவும், இதற்காக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பதில் தடை ஏதும் இல்லை எனவும், அதே உத்தரவு தான் தற்போதும் அமலில் இருப்பதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். சபரிமலை விவகாரத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அமல்படுத்த அரசு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

credit ns7.tv

Related Posts:

  • இதை கண்டிக்காத /கண்டுகொள்ளாத சென்னை வியாசர்பாடியில், ஐகோர்ட் வழக்கறிஞராக பணிபுரியம் ரவி என்பவர், ஐந்துபேர் கொண்ட மர்ம நபர்களால் இரண்டு நாட்களுக்கு முன் வெட்டிக்கொலை செய்யப்பட்… Read More
  • படர்தாமரைக்கு புளியிருக்க புண்ணேது?புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் … Read More
  • Salah Time ( Pudukkottai Dist Only) DayJuly   Hijri   Fajr  Sunrise  Dhuhr  AsrMaghribIsha   Fri126/94:405:5612:19  3:466:417:58   Sa… Read More
  • Money Value Top 10 Currencies   Currency Unit INR per Unit Units per INR USD United States Dollars 67.5192236810 0.0148105968 EUR Euro 74.854984… Read More
  • 1000 முறை துப்பலாம் தவறில்லை... ஸ்வாதி கொலை வழக்கில் குற்றவாளியை அடையாளம் காட்டிய ---------- ஊழியர்.!!!பத்திரிகை_செய்தி.அதுவும் Flash news வேறு..ஊடகங்கள் இப்படி செய்தால் யார் வருவா… Read More