வெள்ளி, 29 நவம்பர், 2019

தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ சேவை தொடக்கம்...!

credit ns7.tv
Image
தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
காற்று மாசுப்பாட்டை குறைக்கும் விதமாக மின்சார வாகனங்களை தமிழக அரசு சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சில மாதங்களுக்கு முன் துபாய் சென்றார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க அங்குள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 
அதன்பேரில் துபாய் நாட்டைச் சேர்ந்த KMC மற்றும் M Auto Electric Mobility நிறுவனங்களின் தயாரிப்பில் நூறு கோடி ரூபாய் முதலீட்டில் ரெட்ரோபிட் முறையில் மின்சார ஆட்டோக்களை, தமிழக முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
சென்னையில் ஏற்படும் காற்று மாசுவில் 11 சதவீதம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆட்டோக்களால் ஏற்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் மின்சார ஆட்டோக்களின் பயன்பாடு அதனை குறைக்க உதவும் என கூறப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சார ஆட்டோக்கள் இரண்டு மணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் 100 கி.மீ. தொடர்ச்சியாக சாலைகளில் பயணிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுவதும் அதிநவீன தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள மின்சார ஆட்டோக்களில் CCTV மற்றும் GPS கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது சாலைகளில் ஓடும் டீசல், பெட்ரோல் ஆட்டோக்களை ரெட்ரோபிட் முறையில் கூடுதலாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்தால், மின்சார ஆட்டோக்களாக மாற்றிக்கொள்ள கூடிய வசதிகளும் உள்ளன.