காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது, அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர், மற்றும் அரசு குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் புதிய எஸ்பிஜி சட்டத்திருத்த மசோதவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமித் ஷா, அரசு குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தாருக்கு 5 ஆண்டுகள் பாதுகாப்பு அளிக்க, மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
credit ns7.tv