சனி, 30 நவம்பர், 2019

உள்ளாச்சி தேர்தல்: அதிமுக குறித்து ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

credit ns7.tv
Image
தொகுதி மறுவரையறை செய்யப்படாமல் அதிமுக அரசு தேர்தலை நடத்தினாலும் திமுக சந்திக்க தயாராக உள்ளது என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. இதனை அதிமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், அதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அனைத்து பகுதிகளிலும் தொகுதி மறுவரையரையை முழுமையாக செய்யவில்லை என விமர்சித்தார்.  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்யவில்லை எனவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிமுக தள்ளிவைத்ததாக குற்றம்சாட்டினார். மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் போன்ற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு குழப்பங்களை அதிமுக அரசு மேற்கொண்டு வருவதாக விமர்சித்த அவர், இதன்மூலம் உள்ளாட்சி தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை கேட்க மாட்டார்களா என்கிற ரீதியில் அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். எனவே, தொகுதி மறுவரையறை செய்யாமல் அதிமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முற்பட்டாலும், திமுக சந்திக்க தயார் என ஸ்டாலின் குறிப்பிட்டார்.