ஞாயிறு, 24 நவம்பர், 2019

பாலில் நச்சு: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்...!


Image
தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை கலந்திருப்பது குறித்து, முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாலில் நச்சுத்தன்மை குறித்து திமுக எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டியுள்ளார். கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான AFM1 நச்சுப்பொருள், மாட்டுத் தீவனம் மூலம் பாலில் கலந்திருப்பதாகவும், இதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருப்பதையும் நினைவு கூர்ந்துள்ளார்.
ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவான பாலில் நச்சுத்தன்மை இருப்பது என்பது பெரும் ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து, முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் 
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

credit ns7.tv