திங்கள், 18 நவம்பர், 2019

பெரியார் குறித்து பாபா ராம்தேவின் சர்ச்சை கருத்து....!

அம்பேத்கர் மற்றும் பெரியாரை பின்பற்றுபவர்களை கண்டு, தான் கவலை கொள்வதாகவும், அஞ்சுவதாகவும் பாபா ராம்தேவ் கருத்து கூறியுள்ளார். மேலும், தந்தை பெரியாரை அவர், "அறிவார்ந்த தீவிரவாதி" என்றும் விமர்சித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
தனது அதே பேட்டியில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசியையும் விமர்சித்த பாபா ராம்தேவ், அவர் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், அத்தகைய சிந்தனை கொண்ட கும்பலுக்கு, ஒவைசி தலைவரை போல் செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். 
இதுபோல், ஹரித்வாரில் யோகா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாபா ராம்தேவ், ராமர், கிருஷ்ணர் காலம் முதல் உயர்சாதியினர் ஆண்டு வந்ததாகவும், அதன்பிறகு ஆதிதிராவிட மக்களும், இஸ்லாமியர்கள் வந்தனர், என்றும் குறிப்பிட்ட பாபா ராம்தேவ், பின்னர் மக்களை பெரியார் தவறாக வழிநடத்தியதாகவும் விமர்சித்தார்.
இதனிடையே, யோகா குரு பாபா ராம்தேவின் கருத்துக்களை கண்டித்து, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெரியார், அம்பேத்கர் குறித்த தனது கருத்துக்கு, பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும்  வலியுறுத்தப்படுகிறது. இதுதொடர்பான #Ramdev_Insults_Periyar,  #Shutdown Patanjali உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகின.
எப்போதும் ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் பாபா ராம்தேவ், இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து பெரியார் குறித்த விமர்சனத்திற்காக மன்னிப்பு கேட்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

credit ns7.tv