விமானங்களில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற வைகோவின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்தும் படி குறிப்பிட்ட துறை அமைச்சருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு பரிந்துரை செய்தார்.
மாநிலங்களவையில் இன்று பேசிய மதிமுக எம்பி வைகோ, விமான பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கங்கள், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அறிவிக்கப்படுவதை சுட்டி காட்டினார். இதனால் பயணிகள் முழுமையாக அதனை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் மாநிலத்துக்கு உள்ளேயே பயணம் செய்யும் விமானங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே அறிவிப்பு வெளியாக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதே போல, பயணிகள் தங்கள் உடைமைகளை எந்த இடத்தில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும், மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு, வைகோவின் நியாயமான கோரிக்கையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு உடனே தெரிவித்து செயல்படுத்துமாறு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சரிடம் பரிந்துரை செய்தார்.
credit ns7.tv