வெள்ளி, 15 நவம்பர், 2019

ஆவின் பாலில் திருக்குறள் குடியேறுவதை வரவேற்கிறேன்: வைரமுத்து

Image
கல்வி நிலையங்களில் மதத்தின் நிழல் படிவது புற்றுநோய் பரவுவதற்குச் சமம் என கவிஞர் வைரமுத்து எச்சரித்துள்ளார். 
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரத் வித்யா பவனில் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 23 பேருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, குழந்தை தொழிலாளர் முறையை அடியோடு அழித்தொழிக்காமல் குழந்தைகள் தினம் கொண்டாடுவதில் என்ன பயன் என கேள்வி எழுப்பினார். 
ஆவின் பாலில் திருக்குறள் குடியேறுவதை தான் வரவேற்பதாக தெரிவித்த கவிஞர் வைரமுத்து, திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடியாது எனவும் குறிப்பிட்டார். கல்வி நிலையங்களில் மதத்தின் நிழல் படிவது புற்றுநோய் பரவுவது போன்றது என்றார். 
credit ns7.tv