புதன், 20 நவம்பர், 2019

மாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா விரைவு!

Image
சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா, தற்கொலை தொடர்பாக அவரது பள்ளி தோழிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா விரைந்துள்ளனர். 
விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் சென்ற மாணவி ஃபாத்திமா, ஏதேனும் தகவல்களைத் தெரிவித்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ஃபாத்திமாவின் சகோதரி மற்றும் தாயாரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதனிடையே, ஃபாத்திமாவின் செல்போன், தற்போது சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மத ரீதியாகவோ அல்லது, வேண்டுமென்றே மதிப்பெண்களைக் குறைத்து மற்ற மாணவர்களுக்கும் தொந்தரவு அளிக்கப்பட்டதா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

credit ns7.tv

Related Posts: