வியாழன், 14 நவம்பர், 2019

தமிழகத்திற்கு தலைகுனிவு : மு.க.ஸ்டாலின் ட்வீட்


Image
கழிவுகளை அகற்றும்போது இறந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது அனைவருக்கும் தலைகுனிவு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், 1993ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தமிழகத்தில் கழிவுகளை அகற்றும்போது 206 பேர் பலியானதாக வெளியாகியுள்ள தகவலை சுட்டிக்காட்டியுள்ளார். 
இந்த காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சியும் அடங்கும் என தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இந்த சமூக அவலத்திற்கு அரசு மட்டுமல்லாது அனைவரும் சேர்ந்து முற்றுபுள்ளி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை எனக் கூறியுள்ள ஸ்டாலின், இந்த தொழிலுக்காக நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

credit ns7.tv