ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்ட விவாகரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், கடந்த ஓராண்டில், சென்னை ஐஐடி-யில் படித்துவந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
➤ சென்னை ஐஐடி-யில் இயற்பியல் துறையில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்த 45 வயதான அதிதி சின்ஹா, கடந்த ஆண்டு(2018) டிசம்பர் 4-ம் தேதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூருவைச் சேர்ந்த இவர், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
➤ சென்னை ஐஐடி-யில் பிஹெச்டி படித்து வந்த ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த 25 வயதான ரஞ்சனா குமாரி, இந்த ஆண்டு(2019) ஜனவரி 1-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
➤ சென்னை ஐஐடியில் எம்.டெக் முதலாமாண்டு படித்து வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் கோபால் பாபு, இந்த ஆண்டு ஜனவரி 28-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
➤ சென்னை ஐஐடியில் எம்.டெக் இறுதி ஆண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஷஹர் கொர்மாத், கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
➤ இதன் தொடர்ச்சியாக, சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டடார் என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv