ஞாயிறு, 17 நவம்பர், 2019

மோசமான சாதனையை படைத்த இந்தியாவின் தலைநகரம்!

credit ns7.tv
Image
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் அதிக மாசு கொண்ட நகரம், என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது நமது தலைநகரம்.
தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ''ஸ்கை மேட்'' காற்று மாசு அதிகம் கொண்ட உலகின் 10 நகரங்களை காற்றின் தரக் குறியீட்டெண் விவரங்களுடன் பட்டியலிட்டுள்ளது. இதில் அதிக மாசு கொண்ட நகரங்கள் பட்டியலில், டெல்லி முதலிடத்தில் உள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் 2வது இடத்திலும்,  உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் 3-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரம் 4-வது இடத்திலும், கொல்கத்தா 5-வது இடத்திலும், சீனாவின் செங்டூ நகரம் 6-வது இடத்திலும் உள்ளன. 7-வது இடத்தில் வியட்நாமின் ஹானோய் நகரமும், 8-வது இடத்தில் சீனாவின் குவாங்சூ நகரும் உள்ளன.
இந்தியாவின் தொழில் நகரமான மும்பை 9-வது இடத்திலும், நேபாளத்தின் காத்மாண்டு நகரம் 10-வது இடத்திலும் உள்ளன.