ns7.tv
ஃபேஸ்புக் நிறுவனத்திடம் பயனர்களின் தரவுகள் கேட்டு அவசர கோரிக்கைகள் விடுக்கும் அரசுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2ம் இடத்தில் இந்தியா உள்ளதாக தெரியவந்துள்ளது.
பயனர்களின் தகவல்களை கோரி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல்வேறு நாட்டு அரசுகளும் அவசர கோரிக்கைகளை எழுப்புகின்றன. இந்த கோரிக்கைகள் தொடர்பான அறிக்கையை ஃபேஸ்புக்கின் துணை தலைவர் க்ரிஸ் சோண்டர்பி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இந்திய அரசு 22,684 அவசர கோரிக்கைகளை அனுப்பியுள்ளது. அவசர கோரிக்கைகளை அனுப்பும் அரசுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளது. 2018ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டைக் காட்டிலும் இது 37% அதிகம் ஆகும்.
50,741 கோரிக்கைகளை அனுப்பியுள்ள அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இது முந்தைய அரையாண்டினை ஒப்பிடுகையில் 23% அதிகம் ஆகும்.
அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்ததாக இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக உலக நாடுகளிடமிருந்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு முந்தைய அரையாண்டைக் காட்டிலும்