ஞாயிறு, 24 நவம்பர், 2019

இறந்தவர்களை வெளியில் தோண்டி எடுத்து கலங்கப்படுத்துவதை விட்டுவிடுங்கள்: திருச்சி சிவா

credit ns7.tv
Image
இறந்தவர்களை வெளியில் தோண்டி எடுத்து கலங்கப்படுத்துவதை விட்டுவிடுங்கள் என சென்னையில் நடைபெற்ற திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சென்னை ராயப்பேட்டையில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா , வேதத்தை படித்தாலும் தவறு இல்லை வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறியவர் திப்பு சுல்தான். அப்படியிருந்தும் அவர் மீது இன்று அவதூறு பரப்பப்படுகிறது எனத் தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் திருச்சி சிவா பேசுகையில் அறிவியல் சந்திரனை ஆய்வு செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தாலும் கூட, தற்போது மனிதம் மட்டும் கற்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. திப்பு சுல்தானின் வரலாற்றை எழுதிய நிறைய பேர் அவர் பற்றிய தவறான தகவல்களை, தவறாக எழுதியுள்ளனர். இன்றைக்கு இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் சரிவை சந்தித்து கொண்டிருக்கிறது, அதற்கு காரணம் எந்த நிறுவனமும் தொழில்நுட்பத்தை வளர்க்கவில்லை. ஆனால் அன்றே நாடு முன்னேற வேண்டுமென்றால் தொழில்நுட்பம் வேண்டும் என உணர்ந்து தொழில்நுட்பத்தை வளர்த்தவர் திப்பு சுல்தான். இன்றைக்கு இறந்தவர்களை வெளியில் தோண்டி எடுத்து, அவர்களை கலங்கப்படுத்துவதை ஒரு கூட்டம் செய்து வருகிறது தயவுசெய்து இறந்தவர்களை தோண்டி எடுத்து கலங்கப்படுத்துவதை விட்டுவிடுங்கள் எனவும் பேசினார்.