எம்.ஜி.ஆர்., சிவாஜியை மிஞ்சிய நடிகர் பிரதமர் மோடி என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, காரைக்காலில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலால் நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் நாராயணசாமி புகார் தெரிவித்தார். நடிப்பில், எம்ஜிஆர், சிவாஜியை பிரதமர் மோடி மிஞ்சிவிட்டதாக குறை கூறிய நாராயணசாமி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
credit ns7.tv