வியாழன், 21 நவம்பர், 2019

மக்களே மேயரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை ரத்து!

Image
மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் முறை அமலாகியுள்ளது. இதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 
தமிகத்தில் நீண்ட நாட்கள் தடைபட்டு வந்த உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பாணை வரும் 2ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலையொட்டி அதிரடி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மாநகராட்சி மேயர் பதவிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகள், கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்,  தற்போது அந்த பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறாததால் அவசரசட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 
நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு பின்னர் அதற்கு ஆளுநர் ஒப்பதல் பெறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அவசரச்சட்டம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாநகர மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியை அலங்கரிப்பவர்களை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். தேர்லில் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் கவுன்சிலர்கள் அவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

credit ns7,tv