இந்தோனேசியாவின் பண்டங் நகரில் ஸ்மார்ட் ஃபோன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை தடுப்பதற்காக, அவர்களுக்கு கோழிகள் கொடுக்கப்பட்டு, அதனை வளர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் தற்போது ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கின்றது. குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருப்பது தெரிந்தும் மக்கள் ஸ்மார்ட் ஃபோன்களை நாடிச்செல்வதற்கு அதில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சமே காரணமாக இருக்கிறது.
இந்நிலையில், இந்தோனேசியாவின், மேற்கு ஜாவாவில் உள்ள பண்டங் நகரில் அரசு சார்பில் 10 மழலையர் பள்ளிகள் மற்றும் 2 உயர்நிலை பள்ளிக்குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு, அதனை பாதுகாப்பாக வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஸ்மார்ட் ஃபோன் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்பதற்காக, இந்த முயற்சியை அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv