வாக்கு வங்கி அரசியல் காரணமாகவே அயோத்தி பிரச்னைக்கு காங்கிரஸ் தீர்வு காணவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் தல்டோன்கன்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது, அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் சிக்கல் நீடித்து வந்ததற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
இந்த சிக்கலுக்கு எப்போதோ தீர்வு கண்டிருக்க முடியும் என்றும், ஆனால், வாக்கு வங்கி அரசியல் காரணமாக தீர்வு காண காங்கிரஸ் தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்கு அரசுகள் மாறி மாறி வருவதும் ஒரு காரணம் என தெரிவித்த நரேந்திர மோடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதன் மூலம், மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக ஜார்க்கண்ட் உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
credit ns7.tv