புதன், 13 நவம்பர், 2019

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டிற்கு பிறகு பேட்டரி சார்ஜ் குறைகிறதா?

credit ns7.tv
Image
உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலியின் புதிய அப்டேட் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட fingerprint lock எனும் வசதி இந்த அப்டேட்டில் கிடைத்துள்ளது. இது பாதுகாப்பை பலப்படுத்துவதாக இருந்தாலும் கூட பேட்டரி சார்ஜை வெகுவாக குறைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்கள் என இரண்டிலும் இந்த பிரச்சனை இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த பிரச்சனை OnePlus மற்றும் Samsung நிறுவன தயாரிப்புகளிலேயே அதிகம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. புதிதாக அறிமுகமான OnePlus 7T Pro மொபைலில் மிக அதிக அளவாக 33-40% வரை பேட்டரி சார்ஜ் குறைவதாக தெரியவந்துள்ளது. மேலும் Android 9 மற்றும் 10 என இரண்டு பதிப்புகளை பயன்படுத்துபவர்களின் பேட்டரியும் அதிக அளவில் குறைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Google Pixel, Xiaomi, Samsung Galaxy S10 series, Galaxy Note 10 series மொபைல்களிலும் இந்த புகார்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த பிரச்சனைகளுக்கு மைய காரணமாக இருப்பது புதிதாக வெளியிடப்பட்ட வாட்ஸ் அப் அப்டேட் (2.19.308) தான் என்பதாக இத்துறை வல்லுநர்கள் தெரிவிகின்றனர். இந்த பிரச்சனையை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் சரிசெய்து புதிய பதிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.