செவ்வாய், 26 நவம்பர், 2019

டெல்லி மக்களை குண்டு வீசி கொன்றுவிடுங்கள்: உச்சநீதிமன்றம் ஆவேசம்!

Image
காற்று மாசுவால் மக்கள் சாவதை விட, வெடிகுண்டுகளை வீசி கொன்று விடுங்கள் என, மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் சாடியுள்ளது
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவால், மக்கள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காற்று மாசை குறைப்பதில், டெல்லி அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்து விட்டதாக விமர்சித்தது. உலகம் நம்மைப் பார்த்து சிரிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மக்களின் ஆயுளை அரசுகள் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினர். 
மேலும், காற்று மாசுவால் மக்களை கொல்வதை விட, வெடிகுண்டுகளை வீசி அவர்களை கொன்று விடுவது மேல் எனவும் நீதிபதிகள் காட்டமாக குறிப்பிட்டனர். கருத்து வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு, ஒன்றாக அமர்ந்து, பேசி காற்று மாசுவை சுத்திகரிக்கும் திட்டங்களை, 10 நாட்களுக்குள் இறுதி செய்யுமாறு, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

credit ns7.tv