நாகர்கோவில் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி மற்றும் 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 567 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கவில்லை என காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காங்கிரஸ் தரப்பில் கடந்த 16ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதாரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக எம்.பி வசந்தகுமார் மற்றும் மூன்று எம்.எல்.ஏக்கள் உள்பட 567 பேர் மீது களியக்காவிளை மற்றும் நேசமணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
credit ns7.tv