வியாழன், 21 நவம்பர், 2019

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Image
சர்வாதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 
தமிகத்தில் நீண்ட நாட்கள் தடைபட்டு வந்த உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பாணை வரும் 2ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் குறித்து அதிரடி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மாநகராட்சி மேயர் பதவிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகள், கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்,  தற்போது அந்த பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறாததால் இதற்கான அவசரசட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சியில் அரசியல் சூழலால் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர், சர்வாதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு முயற்சிப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.
credit ns7.tv