செவ்வாய், 31 டிசம்பர், 2019

இந்தியர்களால் இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட இணையதளங்களின் பட்டியல்!

இந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்ட டாப் 25 இணையதளங்கள் இவைதான். இந்த பட்டியலை பிரபல வெப்சைட் ட்ராக்கிங் இணையதளமான alexa.com வெளியிட்டுள்ளது. 1)www.Google.com 2)www.Youtube.com 3)www.Google.co.in 4)www.Facebook.com 5)www.Amazon.in 6)www.Wikipedia.org 7)www.Yahoo.com 8)www.Flipkart.com 9)www.Onlinesbi.com 10)www.Indiatimes....

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை...!

தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜனவரி இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.  தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.  156...

தமிழகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பள்ளி திறக்கும் தேதியில் பள்ளிக் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது.  உள்ளாட்சி தேர்தல்...

NRC விவகாரத்தில் சோனியா காந்தி அமைதி காப்பது ஏன்?

ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரஷாந்த் கிஷோர், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதற்காக அமைதி காக்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார். பீகாரைச் சேர்ந்தவரான பிரஷாந்த் கிஷோர், தமிழகத்தில் மிகவும் பரிட்சயமானவரே. தேர்தல் வியூகத்திற்கு பெயர் போனவரான இவரை, தங்களுக்காக பணியாற்ற வேண்டுமென அரசியல் கட்சிகள் போட்டி...

ஜன. 9ம் தேதி முதல் பொங்கல் பரிசை வழங்க தமிழக அரசு உத்தரவு!

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு சிறப்புத் தொகுப்பு, வரும் 9-ஆம் தேதி முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாயுடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். இத்திட்டத்தின்...

சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டியுடன் 3 மர்மநபர்கள் பயணம்; வாகனம் சிறைபிடிப்பு!

திருவாரூரில் உள்ளாட்சித்தேர்தலுக்கு பின்னர் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் எடுத்துச்சென்ற வாகனத்தில், மூன்று மர்மநபர்கள் பயணம் செய்வதை அறிந்த பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் போலீஸார் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன. நீலக்குடி...

திங்கள், 30 டிசம்பர், 2019

வட மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை!

வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். டெல்லியில் 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், அங்கு ''ரெட் அலெர்ட்'' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில்,...

கடுங்குளிரில் காஷ்மீர்...உறைந்து போன தால் ஏரி...!

கடும் குளிர் காரணமாக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான தால் ஏரி உறைந்தது. வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஸ்ரீநகரில் நேற்று 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி சென்ற 10000 பேர் மீது வழக்குப்பதிவு..!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று (28-12-2019) பேரணி சென்ற 10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை, ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நடந்த பேரணிக்கு தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநில தலைவர் சம்ஸ்சுல்லஹா தலைமை தாங்கினார். இந்த பேரணிக்கு...

2020ம் ஆண்டினை 20 என சுருக்கி குறிப்பிடலாமா?

2020ம் ஆண்டினை ''20'' என சுருக்கி குறிப்பிடுவதால் மோசடிகள் அரங்கேற வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அவ்வாறு மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதா?  வங்கி ஆவணங்கள் மற்றும் சில விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது பெரும்பாலோர் ஆண்டின் 4 இலக்கங்களையும் குறிப்பிடுவதில்லை. குறிப்பாக ''2019'' ஆண்டினை குறிப்பிடும் போது, பெரும்பாலானோர் ''19'' என மட்டுமே எழுதுவது உண்டு. ஆனால், இதேபோன்று 2020ம் ஆண்டினை ''20'' என சுருக்கி எழுதும் போது,...

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

காவல் அதிகாரி குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்!

உத்தரப்பிரதேசத்தில், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைதான காவல் அதிகாரி குடும்பத்தினரை சந்திக்க, போலீசாரின் தடையை மீறி சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம், நாடு முழுவதும் நீடித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐபிஎஸ்...

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது....!

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை கைது...

மு.க.ஸ்டாலின் ஜார்கண்ட் பயணம்!

ஜார்கண்ட் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.  ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.  இதற்கான...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போடும் போராட்டம்.... மாணவர்கள் கைது!

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிரான வாசகங்களை கொண்ட கோலத்தை வரைந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்த அடையாறு சாஸ்திரி நகர் காவல் துறையினர் கோலத்தை வரைவதற்க்கு அனுமதி மறுத்தனர், மேலும்...

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூர் மாவட்டத்தில் கொசகமுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட குமந்தலி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 13ம் தேதி இரவு அவரது வீட்டிலிருந்து மாயமானார். அடுத்த நாள் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் அச்சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் கொலை சம்பவத்தில்...

ஓடும் ரயிலில் பயணிக்கு பிரசவம் பார்த்த இந்திய ராணுவ மருத்துவர்கள்!

ஓடும் ரயிலில் திடீரென பிரசவ வலி வந்த பெண்ணுக்கு இந்திய ராணுவ மருத்துவர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா, கேப்டன் அமன்தீப் ஆகியோர் மேற்குவங்கத்தில் இருந்து அகமதாபாத் சென்றுகொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அப்போது, திடீரென ரயிலில் வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முன்கூட்டியே...

வட மாநிலங்களில் மிக கடுமையான குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

credit ns7.tv டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிக கடுமையான குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தலைநகர் டெல்லியில் சமீப நாட்களாக கடும் குளிர் வாட்டி  வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை 2 டிகிரி வரை குறைந்ததால் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வரலாறு...

வெள்ளி, 27 டிசம்பர், 2019

இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை என்று பிரதமர் பொய் கூறுகிறார் - ராகுல் காந்தி

இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை என்று பிரதமர் மோடி பொய் கூறுவதாக, ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.   டெல்லியில் கடந்த 22ஆம் தேதி நடந்த பொதுகூட்டத்தில், இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை என்றும், காங்கிரஸ் மற்றும் நகர்ப்புற நக்சல்கள் இதுகுறித்து வதந்திகளை பரப்பி வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான...

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: பிரதமர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும், என அமித்ஷா கூறியுள்ள நிலையில், அத்தகைய திட்டம் ஏதுமில்லை என பிரதமர் மோடி கூறுவது, மக்களை திசைதிருப்புவதாக உள்ளதென திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அனுமதியின்றி நடந்த பேரணியில் பங்கேற்றது தொடர்பான வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கராத்தே...

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது...!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 20 ஆயிரம் பதவிகளுக்கு தலைவர், உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், சுமார் 2 லட்சம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த சில தினங்களாக உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்த நிலையில், வீடு, வீடாக சென்று வேட்பாளர் தீவிர வாக்குச்சேகரிப்பில்...

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...!

இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என பாஜக நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இயக்கம் சார்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திமுக நாடாளுமன்ற...

மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி...!

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டிய அவசியம் என்ன என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தேசிய மக்கள் தொகைப் பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என குறிப்பிட்டுள்ளார்.  குடியுரிமை சட்டத் திருத்தம் 2019ன்...

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பட்டியலில் தமிழகம் 2ம் இடம்!

இந்தியாவிலேயே குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இந்தியாவிலேயே எந்தெந்த மாநிலங்களில் குழந்தைகள் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் என்ற அறிக்கையை குழந்தைகளுக்கான அவசரகால சேவை மையமான Child Line வெளியிட்டுள்ளது.  இதன்படி, 2019-ஆம் ஆண்டில் கேரளாவில் மட்டும் குழந்தைகளுக்கு...

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புத் திட்டம் உள்நோக்கம் கொண்டது - ப.சிதம்பரம்

credit ns7.tv தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புத் திட்டம் உள்நோக்கம் கொண்டது, என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் மட்டுமே செயல்படுத்தப்பட்டது, என விளக்கமளித்துள்ளார்....

6 ஆண்டுகளில் 828 மில்லியன் ஜிபியிலிருந்து 54,917 மில்லியன் ஜிபியாக உயர்ந்த டேட்டா பயன்பாடு!

வயர்லஸ் இணைய பயன்பாட்டாளர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 54,917 மில்லியன் ஜிபி டேட்டாவை பயன்படுத்தியுள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது. இது குறித்து ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014ம் ஆண்டு 828 மில்லியன் ஜிபி வயர்லஸ் டேட்டா  பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த அளவானது 2018ம் ஆண்டில் 46,404 மில்லியன் ஜிபி டேட்டாவை இணைய பயன்பாட்டாளர்கள் உபயோகித்திருப்பதாக...

வியாழன், 26 டிசம்பர், 2019

வானியல் அதிசயங்களில் ஒன்றான சூரிய கிரகணம் நிகழத்தொடங்கியது...!

credit ns7.tv வானியல் அதியங்களில் ஒன்றான சூரிய கிரகணம் நிகழத்தொடங்கியுள்ளது. கிரகணத்தை காண, அறிவியல் மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது, அதன் நிழல், பூமியின் மீது விழும் நிகழ்வே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது....

உத்தரபிரதேச போராட்டம்: பொதுசொத்துக்களை சேதப்படுத்தியதாக 130 பேருக்கு அபராதம் விதிப்பு

உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 130 பேருக்கு, மொத்தம் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்துமாறு, போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 20 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் மூண்ட கலவரத்தில் 17 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தில், ராம்பூர்,...

குடியுரிமை திருத்த சட்ட ஆவண நகலை கிழித்தெறிந்த மாணவி!

கொல்கத்தாவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் குடியுரிமை திருத்த சட்ட ஆவண நகலை  கிழித்தெறியும் மாணவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது விழா மேடை ஏறிய மாணவி தேபஸ்மிதா சவுத்ரி என்பவர் தனக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பல்கலைக் கழக துணைவேந்தரிடம் புன்னகையுடன்...