இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் 9 ஆயிரத்து 247 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் ஒன்று இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலத்தில் தற்போது வரை இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அதுபோல குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்த போது வடகிழக்கு மாநிலங்களில் இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இது போன்ற இணைய சேவை முடக்கங்களால், பல்வேறு துறைகளில் 9 ஆயிரத்து 247 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 196 மணி நேரத்திற்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
credit ns7.tv