தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக தகவல்கள் கேட்டால் கொடுக்காதீர்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான படிவத்தில், புதிதாக 6 தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்பட்டிருப்பதாக மம்தா குறிப்பிட்டுள்ளார். எனவே, மக்கள் யாரும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் தர வேண்டாம் எனவும் யாராவது தங்கள் வசிப்பிடத்துக்கு வந்து தங்களின் விவரங்களைக் கேட்டால் மறுத்துவிடுங்கள் எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியதாக குறிப்பிட்ட அவர், வன்முறை என்பது போராட்டத்தின் சரியான வடிவம் கிடையாது என கூறினார். எனவே, அரசியல் தலைவர்களும், பிற அமைப்புகளின் தலைவர்களும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் மம்தா வலியுறுத்தினார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துவரும் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் மிக பிரம்மாண்ட பேரணியை தலைமை தாங்கி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv