புதன், 8 ஜனவரி, 2020

மத்திய அரசை கண்டித்து, இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்...!

Image
மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. 
தொழிலாளர் சீர்த்திருத்தங்கள், தனியார் மயமாக்கம், பொருளாதார கொள்கைகள் ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. 
AITUC, INTUC, CITU உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றன. ஊதிய உயர்வு, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தல் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தில் வங்கி, போக்குவரத்து மற்றும் பிற துறைகளை சேர்ந்த 25 கோடி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பல்வேறு சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. 
டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

credit ns7.tv