ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம்மை எதிர்த்து எழக்கூடிய எந்த குரலுக்கும் வன்முறையே பதில் என்ற மனநிலையை இந்த அரசு கொண்டுள்ளதாக விமர்சித்தார். யாரை தாக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறிய கனிமொழி, தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
credit ns7.tv