டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் மாணவர்கள் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி. நாம் அனைவரும் இந்துகள் தான் என்றும் கைபர் கணவாய் வந்தவர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லை யென்று இந்துகள் யென்று சொல்லிவிடமுடியுமா என கேள்வி எழுப்பினார். நம்முடைய கலாச்சாரம் ஒற்றை கலாச்சாரம் இல்லையென்றும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஆர். எஸ்.எஸ் . அமைப்பினர் கொடூரமாக இந்த தாக்குதலை நடத்துயுள்ளனர். இந்தியாவின் தலை நகரத்திலேயே இது நடந்துள்ளது இது வன்மையாக கண்டிக்க தக்கது என்று கூறினார்.மேலும் இந்தியாவின் மேன்மையை அளிக்கவேண்டும் என்று இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது ஏவிபி- க்கும், இடது சாரிக்கும் இடையேயான தாக்குதல் என்றால் நாங்கள் கவலை பட்டிருக்கமாட்டோம் இதற்கு பின்னால் ஆர். எஸ் எஸ் .அமைப்பு உள்ளது என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் அருகே அனுமதி பெறாத அமைப்பினர் கோலம் காயத்ரி மற்றும் சில மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். காங்கிசார் தொண்டர்களுக்கும் அந்த மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் அழகிரி அவர்களிடம் வந்து பேசிவிட்டு சென்றார்.
credit ns7.tv