புதன், 8 ஜனவரி, 2020

“தேர்தல் ஆணையத்தின் செயல் சந்தேகத்தை எழுப்புகிறது” - உயர்நீதிமன்ற மதுரை கிளை

Image
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் தாமதிப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யமால் தாமதிப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
Local body Election CCTV
கணினியில் பதிவான காட்சிகளை ஒப்படைப்பதற்கு மூன்று நாட்கள் தேவையா என வினவிய நீதிபதிகள், தேர்தல் ஆணையம் இதுபோன்று செயல்படுவது சந்தேகத்தை எழுப்புவதாகவும் குற்றம்சாட்டினர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்றும் நடைபெற உள்ளது. 

credit ns7.tv