செவ்வாய், 14 ஜனவரி, 2020

CAA விவகாரம்: ராகுல்காந்தி பாத யாத்திரை நடத்த வேண்டும் - திருமாவளவன்

Image
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல்காந்தி பாத யாத்திரை நடத்த வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், வரும் 23, 26 மற்றும் 30ம் தேதிகளில் அனைத்து கட்சிகளும் மக்களோடு உறுதி மொழி எடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். 
வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜக அமல்படுத்தியுள்ளதாக கூறிய திருமாவளவன், இஸ்லாமியர் , இஸ்லாமியர் அல்லாதோர் என்று நாட்டை பிளவுப்படுத்த பாஜக முயல்வதாக குற்றம் சாட்டினார். 
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் தொடர்பாக பின்னர் விவாதிக்கப்படும் என்றும், எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக ஏன் கலந்துக்கொள்ளவில்லை என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் திருமாவளவன் கூறினார்.

credit ns7.tv