ஜே.என்.யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டமிட்ட தாக்குதல் என, பல்கலைக்கழல மாணவர் அமைப்பின் தலைவர் ஐஷி கோஷ் தெரிவித்துள்ளார்.
ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்திற்குள், நேற்று புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை கொடூரமாகத் தாக்கியது. இதில், மாணவர் பேரவைத் தலைவர் ஐஷி கோஷ் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் பேரவைத் தலைவர் ஐஷி கோஷ், ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. அமைப்பினரே தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டினார்.
கடந்த 5 நாட்களாக, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சில ஆர்.எஸ்.எஸ். ஆதரவுபெற்ற பேராசிரியர்கள், வன்முறையை தூண்டிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தக்குதல் நடத்த வந்தவர்களுக்கும், காவலாளிகளுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாகவும், தாக்குதலுக்குக் காரணமான பல்கலைக்கழக துணைவேந்தரை, உடனடியாக நீக்க வேண்டுமெனவும் ஐஷி கோஷ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த தாக்குதலை கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்பட்டது. நெருப்பு பந்தத்தை ஏந்தி கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு, ராய்சினா சாலையில் இருந்து இந்தியா கேட் வரை பேரணி சென்றனர்.
credit ns7.tv