போராடும் மாணவர்கள் மீது மத்திய அரசு வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, மிக மோசமான செயல்பாடு என, திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் கனிமொழி, போராட்டத்திற்கு திமுக முழுமையாக ஆதரவு தரும் என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்ன போராட்டம் நடத்தினாலும் மக்களுடைய குரலை ஒருபோதும் கேட்பதில்லை என்ற மத்திய அரசின் போக்கு மிகவும் மோசமானது என விமர்சித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை, போராட்டத்திலிருந்து திமுக பின்வாங்காது எனவும் கனிமொழி தெரிவித்தார்.
credit ns7.tv