போர்க்குற்ற விசாரணையில் இருந்து எந்த நாடும் தன்னிச்சையாக விலக முடியாது, என்று ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் செய்தித் தொடர்பாளரான ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ல் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா. மனித உரிமைகள் நல ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பன்னாட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இலங்கை ராணுவத் தளபதியாக உள்ள சாவேந்திர சில்வா, தங்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என அமெரிக்கா தடை விதித்தது.
இதையடுத்து, போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தில் இருந்து, இலங்கை விலகுவதாக அந்நாட்டு அரசு, ஜெனிவா கூட்டத்தில் தெரிவித்தது. இது, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவ்வாறு எந்த நாடும் போர்க்குற்ற விசாரணையில் இருந்து தன்னிச்சையாக விலகவிட முடியாது என்று, ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் செய்தித் தொடர்பாளரான ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார். இதே கருத்தை, இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv