மீன்களில் பார்மலின் ரசாயனம் தெளிக்கப்படும் விவகாரம் பூதாரமாகியுள்ள நிலையில், இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை கரிமேடு மீன் விற்பனை சந்தையில் ஃபார்மலின் ரசாயனம் தெளிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2 டன் மீன்கள், நண்டு மற்றும் இறால்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். சவக்கிடங்கில் மனித உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்படும் பார்மலின் ரசாயனத்தை வியாபாரிகள் மீன்களின் மேல் தெளித்து விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இப்பிரச்சனையின் பின்புலத்தில் கறிக்கோழி உரிமையாளர்கள் இருப்பதாக பகீர் புகாரை கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில், கடலோர பகுதிகளில் பார்மலின் குறித்த சர்ச்சைகள் இல்லையென்று கூறும் பொதுமக்கள், மீன்கள் கரைக்கு வந்ததும் விற்பனைக்கு வந்துவிடுவதால் நம்பிக்கையுடன் வாங்கிச்செல்வதாக தெரிவிக்கின்றனர்.
கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களை விற்பனைக்கு முன் சோதனை செய்யாமல், கடைகளில் சோதனையிடுவது பிரச்னைக்கு தீர்வாகாது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை கரிமேடு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கலந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
credit ns7.tv