விபத்தில் பலியான புலம்பெயர் தொழிலாளர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் ஒரே வாகனத்தில் அனுப்பி வைத்த உத்தரப்பிரதேச அரசின் செயலுக்கு ஜார்கண்ட் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு டிரக்குகள், உத்தரபிரதேச மாநிலம் அவுரையா என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. கடந்த சனிக்கிழமை நடந்த இந்த விபத்தில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
How UP was sending bodies of workers killed in #AuraiyaAccident home. Bags of plastic on ice slabs in open truck.. .. The ice melted. Will our hearts remain frozen?
The bodies of workers killed in #AuraiyaAccident were finally transferred into this ambulance after @HemantSorenJMM objected to victims bodies being bundled into plastic, thrown into the back of open truck, with those still alive and injured. No words some days.
இதைப் பற்றி 893 பேர் பேசுகிறார்கள்
உயிரிழந்தவர்களில் 11 பேர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தோரின் உடல்களையும் அவர்களின் மாநிலங்களுக்கு உத்தரபிரதேச அதிகாரிகள் 3 லாரிகளில் அனுப்பி வைத்தனர். லாரியில் இறந்தவர்களின் உடல்களை வைத்து ஒரு தார்ப்பாயினால் மூடி, அருகிலேயே காயமடைந்தவர்களையும் படுக்க வைத்து அனுப்பி உள்ளனர். உத்தரபிரதேச அரசு அதிகாரிகளின் இந்த செயலால் ஜார்க்கண்ட் மாநிலம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், மனிதத்தன்மையற்ற இந்த செயல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களின் உடல்களை மாநில எல்லை வரை கொண்டு வர உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரபிரதேச அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட உடல்களை, ஆம்புலன்ஸுக்கு மாற்றி சொந்த ஊர் அனுப்பி வைத்துள்ளனர்.
credit ns7.tv