உலகெங்கிலும் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் ஆப்களில் வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமான ஒன்றாகும். வீடியோ, குரல் (voice ) மற்றும் டெக்ஸ்ட் (text) மூலமாக உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து இருக்க இது அனுமதிக்கிறது. எனினும் சில நேரங்களில் உங்களது கைபேசி எண் நீங்கள் பேச விரும்பாத நபர்கள் அல்லது விளம்பர பட்டியலில் (promotional list) சேர்க்கப்படும். அந்த நேரங்களில் நீங்கள் இந்த தொடர்புகளில் (contact) இருந்து குறுஞ்செய்தி பெறுவதை நிறுத்த வேண்டும் என நினைப்பீர்கள்.
இந்த தொடர்புகளில் இருந்து குறுஞ்செய்தி பெறுவதை நிறுத்த நீங்கள் அவற்றை எளிதாக வாட்ஸ் ஆப்பில் தடுக்கலாம் (block).
ஒரு தொடர்பை தடுத்து விட்டால் அந்த நபர் ஏதாவது டெக்ஸ்டை உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று முயன்றால் அது வராது. உங்களது last online status, display picture, description போன்றவற்றை தடுத்து வைத்துள்ள நபரால் பார்க்கவும் முடியாது. தடுத்து வைத்துள்ள தொடர்பை unlock செய்யாமல் நீங்களும் அவருக்கு எந்த குறுஞ்செய்தியையும் அனுப்ப முடியாது.
ஒரு தொடர்பை எவ்வாறு வாட்ஸ் ஆப் (iOS)ல் தடுக்க வேண்டும்
* வாட்ஸ் ஆப்பை திறந்து நீங்கள் தடுக்க விரும்பும் நபரின் chat க்கு செல்லவும்.
* அவருடைய பெயர்/ எண்ணில் தட்டி contact info page ஐ திறக்கவும்.
* கீழே ஸ்க்ரால் செய்து ‘Block this contact’ பொத்தானை தட்டவும்.
* அந்த தொடர்பை தடுக்க (block) வேண்டுமா வேண்டாமா என்று ஒரு உறுதிபடுத்தலை உங்களிடம் கேட்கும்.
* confirm என்பதை அழுத்தி அந்த தொடர்பை தடுக்கவும்.
ஒரு தொடர்பை எவ்வாறு வாட்ஸ் ஆப் (ஆண்ட்ராய்டில்) தடுக்க வேண்டும்
* வாட்ஸ் ஆப்பை திறந்து நீங்கள் தடுக்க விரும்பும் நபரின் chat க்கு செல்லவும்.
* chatboxன் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.
* ‘More’ விருப்ப தேர்வை சொடுக்கி ‘Block’ விருப்பத் தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
* அடுத்து அது உங்களுடைய உறுதிப்படுத்தலைக் கேட்கும் அதை கொடுத்தவுடன் அந்த நபருடைய தொடர்பை தடுத்துவிடும்.
ஒரு தொடர்பை unblock செய்ய, chatbox window ஐ திறந்து chatboxன் உள்ளே காண்பிக்கப்படும் unblock notification ஐ அழுத்தவும்.