credit ns7.tv
HIV போன்று கொரோனா வைரஸும் ஒருபோதும் மறையாமல் நம்மிடையே எப்போதும் தங்கிவிடக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரயன் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரயன், இந்த கொரோனா வைரஸ், மேலும் ஒரு Endemic வைரஸாக மாறி நம் சமூகத்தில் தங்கிவிடக்கூடும், இது போன்று தான் HIV வைரஸ் தங்கிவிட்டது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “நான் இரண்டு நோய்களையும் ஒப்பிடவில்லை இருப்பினும் நாம் யதார்த்தமாக இருக்க வேண்டியது முக்கியம் என கருதுகிறேன். இது (கொரோனா) எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் கணிக்க முடியாது என நினைக்கிறேன் என்று ரயன் கூறினார்.
தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஊரடங்கை அரசு தளர்த்தும் போது அதிகளவிலான தொற்று பாதிப்புக்கு வித்திட்டு மீண்டும் ஒரு கடுமையான ஊரடங்கை அரசுகள் அமல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதனால் தொற்று எண்ணிக்கையை கூடுமான வரை குறைத்துவிடுவது நன்மைதரும் என அவர் வலியுறுத்தி கூறினார்.
வைரஸ் தடுப்புக்கு முதலில் தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும், அது பயன் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும், அதை ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்திட வேண்டும் என்று நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரயன் கூறினார்.