தமிழகத்தில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் பூதாகரமாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம், பதவி உயர்வு செய்யப்பட்டு தமிழக அரசு கடந்த 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அந்த மாற்றத்தில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐ.ஜி.,யாகவும், 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஏ.கே., விஸ்வநாதன், காவல் துறை செயலாக்கம் ஏ.டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார். . அவருக்கு பதிலாக காவல்துறை செயலாக்க டிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.நகர் டிசியாக ஹரிகிரன்பிரசாத், பூக்கடை டிசியாக கார்த்திக் ஐபிஎஸ், கரூர் எஸ்.பியாக பகலவன் ஐ.பி.எஸ், திண்டுக்கல் புதிய எஸ்.பி ராகவலி பிரியா ஐபிஎஸ், கன்னியாகுமரி புதிய எஸ்.பி.யாக பத்ரி நாராயணன், ஈரோடு எஸ்.பியாக இருந்த சக்தி கணேசன் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாகவும், நாமக்கல் எஸ்.பியாக இருந்த அருளரசு கோவை எஸ்.பி.யாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை எஸ்.பி.யாக சுஜித்குமார், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக பாலாஜி சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சண்முகபிரியா, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் ஐபிஎஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.